Author Topic: ~ மரவள்ளிக்கிழங்கு பார்லி அடை ~  (Read 326 times)

Offline MysteRy

மரவள்ளிக்கிழங்கு பார்லி அடை



துருவிய மரவள்ளிக்கிழங்கு – 1 கப்,
பார்லி – 1/4 கப்,
புழுங்கலரிசி – 1 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
மிளகாய் – 3,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பார்லி அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். உப்பு, மரவள்ளிக்கிழங்கு சேர்த்து மைய அரைக்கவும். அரைத்த மாவை தோசைகளாக சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.