Author Topic: ~ சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு ~  (Read 344 times)

Offline MysteRy

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு



தேவையான பொருட்கள் :

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 1 கப்,
பாதாம், வேர்க்கடலை, வால்நட் எல்லாம் சேர்ந்து – 1/2 கப்,
பேரீச்சம் பழங்கள் – 13,
நெய் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – சிறிதளவு.

செய்முறை :

* ஓட்ஸை வெறும் கடாயில் 5 நிமிடம் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* கொடுக்கப்பட்டிருக்கும் பருப்புகளையும் இதே போல் அரைக்கவும்.
* பேரீச்சம் பழங்களை தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* இவை அனைத்தையும் கலந்து நெய் சேர்க்கவும்.
* பின்னர் உருண்டைகளாக பிடிக்கவும். இதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
* குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு இது.