Author Topic: ~ பீன்ஸ் கொள்ளு பொரியல் ~  (Read 370 times)

Offline MysteRy

பீன்ஸ் கொள்ளு பொரியல்



தேவையானவை:

பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
——
கொள்ளு 1/4 கப்
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் 1 துண்டு
——-
உப்பு,எண்ணெய் தேவையானது
——-

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.
கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்
தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave “H” ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.
அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.
பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.