Author Topic: ~ கார்ன் மஞ்சூரியன் ~  (Read 317 times)

Offline MysteRy

~ கார்ன் மஞ்சூரியன் ~
« on: August 02, 2016, 09:48:39 PM »
கார்ன் மஞ்சூரியன்



தேவையானவை:

பேபி கார்ன் 10
Spring onion 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 2
Soy sauce 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது2 தேக்கரண்டி
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
கார்ன் மாவு 1 மேசைக்கரண்டி
மைதா மாவு 1 மேசைக்கரண்டி
உப்பு எண்னெய் தேவையானது

செய்முறை:

பேபி கார்ன் ஐ அப்படியே Microwave H ல் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்.
வெளியே எடுத்து துண்டுகளாக நறுக்கவும்.
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி,மிளகு தூள்,கார்ன் மாவு,மைதாமாவு,மிளகாய் தூள் எல்லாவற்றையும் சிறிது உப்புடனும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதில் நறுக்கிவைத்துள்ள கார்ன் துண்டுகளை பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து spring onion, பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது (1 தேக்கரண்டி) வ்தக்கி அதில்
அதில் பொரித்த கார்ன் துண்டுகளை சேர்த்து அதனுடன் soy sauce சேர்க்கவும்.தேவையான் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.