Author Topic: ஆசைகள் அற்ற உலகம்  (Read 379 times)

Offline thamilan

ஆசைகள் அற்ற உலகம்
« on: July 29, 2016, 08:30:18 PM »
சொந்த மகிழ்ச்சிக்காக
சிந்திப்பதை விட்டு விட்டு
மற்றவர் மகிழ்ச்சிக்காக
உழைத்தால் தேடி வரும் ஆனந்தம்

சுவையான வாழ்க்கையை
சுமையாக மாற்றுவதே
சுயநலம்

சுமையை சுவையாய் மாற்றிவிடுகிறது
பொதுநலம்

ஆசையே துயரத்துக்கு காரணம்
என்று அறிந்து சொன்ன
புத்தனுக்கும்
ஓர் ஆசை இருந்தது

அது தான்
ஆசைகள் அற்ற உலகம்!

அப்படிப்பட்ட உயர்ந்த ஆசைகள்
உலகத்திற்கு
எழில் சேர்க்கும்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ஆசைகள் அற்ற உலகம்
« Reply #1 on: August 13, 2016, 08:42:52 AM »

மிக அற்புதம் நண்பா !!!!
 ஆசையற்ற எண்ணம்
    பொதுநல வாழ்க்கையை
        வழிவகுக்கும் என்பதினை
            அழகாக கூறியுள்ளீர் ....!!!!
 நன்றி !!!!