Author Topic: புகைப்படபிடிப்பாளரின் பிரச்சினைக்கு புதிய தீர்வு  (Read 5263 times)

Offline RemO



பொதுவாக புகைப்படக் கலைஞர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை விரைவில் பற்றரி விரையமாவதாகும். அவசர நேரத்தில் இந்த பற்றரிகள் தொல்லை கொடுப்பது புகைப்பட கலைஞர்களுக்கு பெரும் பிரச்சினையாகவே இருந்துவந்துள்ளது. ஆகையினால் இதற்கு மாற்றுவழி பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள்.

சீன நாட்டின் கண்டுபிடிப்பாளர் 'வெங் ஜீய்' இந்தப்பிரச்சினைக்கு புதிய தீர்வொன்றை கண்டறிந்திருக்கிறார். அதாவது கமெராவின் பட்டியில் சூரிய சக்தியை சேமிக்கும் தகட்டினைப் பொருத்தி அதன் மூலம் கமெராவுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் புதிய வடிவத்தினைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உலகிலுள்ள புகைப்பட கலைஞர்கள் பெரும் நன்மையடைவார்கள் என வெங் ஜீய் குறிப்பிட்டிருக்கிறார்.

சூரிய சக்தியில் இயங்கும் இந்த பட்டிகளை இன்னும் ஒருமாதத்தில் உலக சந்தைக்கு வெளியிடலாம் எனவும் அவர் எதிர்வுகூறியிருக்கிறார்.