Author Topic: ~ கருவாட்டு குழம்பு ~  (Read 346 times)

Offline MysteRy

~ கருவாட்டு குழம்பு ~
« on: July 19, 2016, 11:22:08 PM »
கருவாட்டு குழம்பு



கருவாடு – 25 துண்டுகள்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 10
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
கத்தரி – 1
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
புளி தண்ணீர் – 4 தேக்கரண்டி
தடித்த தேங்காய் பால் – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு

முதலில் மீன் துண்டுகளை 15 நிமிடங்கள் சூடான நீரில் போட்டு சுத்தம் செய்யவும். ஒரு மண் பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்த பின் பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வேக விடவும். கத்தரிக்காய் துண்டுகளுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் தண்ணீர் மற் றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இப்போது புளி தண்ணீர் சேர்த்து அத்துடன் கருவாடு துண்டுகளையும் போட்டு கலக்கவும். பின் அவற்றை ஒரு மூடி கொண்டு மூடி 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும். பின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான கருவாடு குழம்பு தயார்.