Author Topic: ~ தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி ~  (Read 505 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226280
  • Total likes: 28760
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி



தேவையான பொருட்கள் :

எள்ளு – 200 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
* வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்).
* பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும்.
* சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி.