Author Topic: கோபத்திடம் கோபம்  (Read 468 times)

Offline thamilan

கோபத்திடம் கோபம்
« on: July 12, 2016, 06:56:03 PM »
கோபத்திடம் கோபித்தாலும்
கோபத்துக்கு ஏனோ
கோபமே வருவதில்லை

வெளியே போ என்று
எத்தனை முறை துரத்தினாலும்
சிந்தனைப்படைகளின் முன்வரிசையில்
வந்தமர்கின்றது கோபம்

கவலையில் பிறக்கும் கோபம்
தோல்வியில் அழுது கர்ஜித்து
எதிர்பார்ப்புக்கும் நிஜத்துக்கும் இடையே
தத்தளிக்கிறது

கோபம் களைய முதல் மருந்து
பொறுமை!!
பிறகு?
பாசம் நிறைந்த மனதில்
அடுத்தவர் நிலை அறியும்
ஞானம்!
அது தரும் விவேகமான 
மெளனமும் புன்னைகையும் 

உனக்கு நீ செய்யும் பேருதவி
யாரிடமும் கோபப்படாமல் இருப்பதே!
கோபமில்லா மனம்  ஒரு
அழகிய பூந்த்தோட்டம்
அதில் இருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தையும்
வாசமிகு மல்லிகை பூ


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: கோபத்திடம் கோபம்
« Reply #1 on: July 14, 2016, 02:33:43 PM »


Offline SweeTie

Re: கோபத்திடம் கோபம்
« Reply #2 on: July 15, 2016, 05:36:24 PM »
ஒவ்வொரு வார்த்தையும்
   வாசமிகு மல்லிகை பூ......... நான் பேசும் வார்த்தைகளா தமிழன்???
   வாழ்த்துக்கள் 

Offline thamilan

Re: கோபத்திடம் கோபம்
« Reply #3 on: July 16, 2016, 07:59:02 PM »
நன்றி rithika


SWEETIE
உங்கள் வார்த்தைகள் சில நேரம் மனதை மயக்கும்
ரோஜாப்பூ
சில நேரம் கோபம் வந்தால் மிளகாய்ப்பூ