
பெண்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகள் ..?¿
தாய் ..?¿
தாய் என்னும் வரம் எடுத்து நான் செய்த தவறுகளுக்காய் தலைகுனிந்து ..
சிறு கை உணவை கூட என் சிறுகுடலில் தினித்து விட்டு ..
வறுமை என்னும் சோறு எடுத்து தன் வயிற்றை நிரப்பி கொண்டு ஏன்னை ஏமாற்றி விட்டதாய் ஏலனமாய் பார்க்கிறாள் ..?¿
தங்கை ..?¿
பாசமெல்ல மனதில் பூட்டி
பாவிமவ சண்டையிட்ட காணொலி காட்சி ..
அவ கணவன் கரம்பிடித்து கண் முன்னே நிற்க்கையில சண்டையிட ஆள் இல்ல கை ஓங்கி ஏமாந்து நிக்குறன் ..?¿
அக்கா ..?¿
நான் பெயர்ச்சொல்லி அழைத்த முதல் பெரிய மனுஷி ..
முகம் சுழிக்காம கதைகேப்பா
அது என் காதல் கதையா இருந்தாலும் ..
இன்று அவளுக்கு கதைசொல்ல அவ குழந்தை
என் கதைகள் எடுபடல ..
ஏமாற்றத்துடன் பல காதல் கதைகள் ..?¿
தோழி ..?¿
களவு இல்லா காதலின் முதல் சபரிசம் ..
கைபிடித்து சண்டை போட்ட பாரதியின் புதுமை பெண் ..
இன்று குடும்ப சுழல்களால் என் கை உதரி ,
காணமல் போன உண்மை கண்ணகிகள் இவர்கள் ..
ஏமாற்றிவிட்டால் என்னுடன் இருப்பேன் என்று ..?¿
காதலி ..?¿
கண்தேடிய கண்ணனின் ராதை இவள் , என் பின்னே சுற்றி திரிந்த மான்குட்டி ..
என் கண்கிணற்றின் ஆழத்தை முழுதாய் அறிந்த உலகின் ஓர் உயிர் ..
பெற்றோரின் வேண்டுகோளுக்கு இனங்க என்னை ஏமாற்றி விவாகரத்து பெற்றுவிட்டால் ..?¿
மனைவி ..?¿
என் மகள் குழந்தை என அவள் தந்தை என்னிடம் சொல்ல ..
எனக்காய் ஒரு குழந்தை தந்து இவ்வுலகின் மரபில் என்னை உயர்த்த செய்வாய் ..
என் இறுதிச்சடங்கை நடத்தும் உரிமை அவளிடம் மட்டுமே உண்டு ..
நான் இல்லாமல் போய்விட்டால் இவள் கண்ணீரீல் இந்த உலகை ஏமாற்றி தனியாய் நிற்ப்பால் நான் ஏமாற்றியதர்க்காய் ..?¿
மங்கையராய் பிறப்பதற்க்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா ..
இவன் ..
இரா.ஜகதீஷ் ?¿