Author Topic: ~ இரும்பு சத்து நிறைந்த களாக்காய் ~  (Read 388 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226712
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரும்பு சத்து நிறைந்த களாக்காய்



களாக்காயின் பழம் கனிந்து கருப்பு நிறத்தில் நாவல் பழத்தை போல காட்சியளிக்கிறது. இதன் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் காணப்பட்டாலும், ஏராளமான தாதுக்களையும், வைட்டமின்களையும் இது உள்ளடக்கியது. விட்டமின் ஏ, சி , இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையை தடுக்ககூடியதாக உள்ளது.
களாக்காய், மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது. பற்களில், ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியது. விட்டமின் சி குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது. ஈரலுக்கு பலம் தரக் கூடியது. மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கிறது.
அதே போல களாக்காயின் வேர்களை பயன்படுத்தி அதிக தாகம், நாவறட்சிக்கான ஒரு எளிமையான மருந்தை தயார் செய்யலாம். களாக்காய் செடியின் வேர்ப்பொடியை ஒரு ஸ்பூன் அதனுடன் சம அளவு சர்க்கரை ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை, மாலை இரு வேளையும் எடுத்து வந்தால், நா வறட்சி, அதிக தாகம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
தொண்டைவலி உள்ளவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது. ஈரலுக்கு பலம் தரக் கூடியதாக, பசியை தூண்டுவதாக, மலச்சிக்கலை போக்குவதாக இது விளங்குகிறது. களாக்காயில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. பற்களில், ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியது. வைட்டமின்சி குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது.
பசியை தூண்டுகிறது. ஈரலுக்கு பலம் தரக் கூடியது. மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கிறது. பித்தத்தை போக்கி, வாய் கசப்பை நீக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது. குமட்டலை தடுத்து நிறுத்துகிறது.