Author Topic: ~ ஸ்டஃப்டு சட்னி பால்ஸ் ~  (Read 398 times)

Offline MysteRy

ஸ்டஃப்டு சட்னி பால்ஸ்



]சட்னி செய்ய (பூரணம்):

தேங்காய்த்துருவல் – ½ கப்,
பச்சைமிளகாய் – 2-3 அல்லது தேவைக்கு,
புதினா – ½ கப்,
மல்லித்தழை – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு.

மேல் மாவிற்கு:

வேக வைத்து மசித்த பெரிய உருளைக்கிழங்கு – 1,
சுத்தப்படுத்திய அவல் – ½ கப்,
துருவிய பனீர் – ½ கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

மேல் செய்வதற்கு:

சாட் மசாலா – அலங்கரிக்க,
மைதா – ½ கப் (சிறிது தண்ணீரில் கரைத்தது),
ரொட்டித்தூள் – 2 கப்.

எண்ணெய், சாட் மசாலா, மைதா, ரொட்டித்தூள் தவிர உருளைக்கிழங்கு, மிளகாய், மிளகு, உப்புத்தூள் சேர்த்து அவல், பனீர் சேர்த்து கெட்டியான கலவையாக பிசைந்து வைக்கவும். சட்னிக்கு கொடுத்ததை கெட்டியாக அரைத்து வைக்கவும். இப்போது மேல் கலவையை எடுத்து சொப்பு மாதிரி செய்து சட்னியை 1 டீஸ்பூன் உள்ளே வைத்து உருட்டி சிறு பந்து மாதிரி செய்து, மைதா கலவையில் தோய்த்து ரொட்டி தூளில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலா தூவி பரிமாறவும்.