Author Topic: ~ பிரெட் பொரியல் ~  (Read 346 times)

Offline MysteRy

~ பிரெட் பொரியல் ~
« on: July 07, 2016, 10:15:07 PM »
பிரெட் பொரியல்



தேவையானவை:

சின்ன பிரெட் பாக்கெட் – 1,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி –2, மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மல்லி இலை– சிறிதளவு,
கறி மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் (சின்ன ஸ்பூனாக எடுத்துக்கொள்ளவும்),
எண்ணெய் – அரை கப், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

 பிரெட்டை ஃப்ரிட்ஜில் சுமார் 2 மணி நேரம் வைத்து எடுத்து சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கொஞ்சம் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுக்கவும்.வெங்காயத்தை நீளநீளமாகவும், தக்காளியைத் துண்டுகளாகவும் நறுக்கவும். எண் ணெய் காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு அது பொரிந்து பொன்னிறமானதும் வெங்காயத்தை வதக்கி, தக்காளி, உப்பு, மிளகாய் தூள், கறி மசால் சேர்க்கவும்.
கடைசியாக பிரெட்டைப் போட்டுப் புரட்டிச் சூடு வந்ததும் இறக்கி மல்லி இலை சேர்க்கவும்.