Author Topic: ~ சத்தான சுவையான ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு ரொட்டி ~  (Read 332 times)

Offline MysteRy

சத்தான சுவையான ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு ரொட்டி



தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – 1 கப்
உருளைக்கிழங்கு – 4
பச்சை மிளகாய் விழுது – 1டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை தண்ணீரை வடித்து போடவும். அதனுடம் ப.மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். அனைத்து நன்றாக கலந்து மாவு பதம் போல் வரும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது மாவை கல்லில் போட்டு சப்பாத்தி போல் மெலிதாக தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான ஜவ்வரிசி ரொட்டி ரெடி.