Author Topic: ~ பிரட் தக்காளி சூப் ~  (Read 437 times)

Offline MysteRy

~ பிரட் தக்காளி சூப் ~
« on: July 07, 2016, 09:15:45 PM »
பிரட் தக்காளி சூப்



தேவையான பொருட்கள்

பட்டர் – 1 தேக்கரண்டி
பே லீஃப் – 1
பூண்டு – 4 பற்கள்
வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
தக்காளி – 4 (நடுத்தர அளவு)
பீட்ரூட் – நடுத்தர அளவு பீட்ரூட்டில் கால் பங்கு
உப்பு – தேவையான அளவு
நல்ல மிளகு தூள் – தேவையான அளவு
சர்க்கரை – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
பால் – 1/4 கப்
தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
நீர் – 3-4 கப்
பிரட் துண்டுகள் – 2
எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பின்பு இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்
அவற்றை படத்தில் உள்ளது போல சதுரமாக வெட்டிக் கொள்ளவும்
பின்பு தவாவை சூடாக்கி பிரட் துண்டுகளை வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
பின்பு அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
அதன் பின் பிரஷர் குக்கரில் பட்டரை போட்டு உருக வைக்கவும்
பின்பு அதனுடன் பிரிஞ்சி இலை நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
பின்பு தக்காளி மற்றும் பீட்ரூட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
பின்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
பின்பு அதனுடன் நீா் சேர்த்து நன்கு கலக்கவும்
பிறகு குக்கரை மூடி வைத்து வேக வைக்கவும்
இப்போது அனைத்தும் வெந்து விட்டது
அதன் பின் அதிலிருந்து பிரிஞ்சி இலையை நீக்கி விடவும்
பின்பு அதனை நன்கு மசித்துக் கொள்ளவும்
பின்பு அதனை ஒரு சாஸ் பானில் நன்கு வடிகட்டிக் கொள்ளவும்
பிறகு தேவைப்பட்டால் தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்
சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் 1/4 கப் பால் சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு அதனை சூப்புடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்
நன்கு கலக்கி பின்பு மீண்டும் வேக வைக்கவும்
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
பின்பு பொரித்தெடுத்த பிரட் துண்டுகளை அதன் மேல் போடவும்
பின்பு நல்ல மிளகு தூள் சேர்க்கவும்
சூப் ரெடி. டயட்டில் இருப்பவர்கள் இதனை செய்து அருந்தலாம்