Author Topic: ~ லாங்பீன்ஸ் ஃபிரை ~  (Read 314 times)

Online MysteRy

~ லாங்பீன்ஸ் ஃபிரை ~
« on: July 07, 2016, 09:13:22 PM »
லாங்பீன்ஸ் ஃபிரை



தேவையான பொருட்கள்

லாங் பீன்ஸ் – 500 கிராம்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1
இஞ்சி – 1 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ½தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

லாங் பீன்ஸை 1.5 இஞ்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்.
பெரிய கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு சேர்த்து தாளிக்கவும் பின்பு கறி வேப்பிலை சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய பீன்ஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். பீன்ஸில் அதிக அளவு நீர் இருக்கும் எனவே நீர் சேர்க்க தேவையில்லை.
மிதமான தீயில் 15 – 20 நிமிடம் வேக வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
பின்பு 1-2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
லாங் பீன்ஸ் பொரியல் ரெடி