Author Topic: ~ எக்லெஸ் வெனிலா கப் கேக் ~  (Read 400 times)

Online MysteRy

எக்லெஸ் வெனிலா கப் கேக்



தேவையானவை

மைதா – இரண்டரை கப்
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – ஒரு டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
ஐஸிங் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் – 300 மில்லி
தண்ணீர் – ஒரு கப்
வினிகர் – 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் – அரை கப்
கப் கேக் மோல்ட் – ஒன்று
லைனர் – தேவையான அளவு

செய்முறை:

கப் கேக் மோல்டின் உள்ளே லைனர்களை வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளவும். அவனை 180 டிகிரியில் 20 நிமிடம் பிரீஹீட் செய்துகொள்ளவும். தண்ணீர், கண்டென்ஸ்டு மில்க், வினிகர், ஐஸிங் சர்க்கரை், உருக்கிய வெண்ணெய், வெனிலா எசன்ஸ் என எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சலித்து வைத்திருக்கும் மாவை வெண்ணெய் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டிகள் விழாமல் நன்கு கலக்கவும். இனி மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே கலவையை ஊற்றவும். அவனின் உள்ளே
மோல்டை வைத்து மூடி, 20 முதல்
25 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். டூத்பிக்கால் கேக்கின் நடுவே குத்தி பார்த்தால், குச்சியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.

ஐஸிங் செய்யும் முறை:

தேவையானவை
ஐஸிங் சர்க்கரை – ஒரு கப்
ஆரஞ்சு ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ஐஸிங் சர்க்கரையை ஆரஞ்சு ஜூஸில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
ஆறவைத்த கேக்கின் மேல் அப்படியே பூசலாம் அல்லது தெளித்துவிடலாம்.