Author Topic: ~ சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக் ~  (Read 312 times)

Offline MysteRy

சாக்லேட் ஸ்பாஞ்ச் கேக்



தேவையானவை

மைதா – 175 கிராம்
கோகோ பவுடர் – 50 கிராம்
முட்டை – 3
பால் – 3 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – 100 கிராம்
ஐஸிங் சர்க்கரை – 300 கிராம்
சூடான தண்ணீர் –
6 டேபிள்ஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
பட்டர் பேப்பர் – 2

செய்முறை:

அவனை 180 டிகிரியில்
20 நிமிடங்கள் பிரீஹீட் செய்யவும். 9 இன்ச் கேக் பேனில் உள்ளே பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர், உப்பு மூன்றையும் கலந்து ஒன்றாக சலித்துக்கொள்ளவும். ஒரு பவுலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்துச் சேர்த்து அடிக்கவும். பிறகு, மைதா, பால் என ஒன்றன் ஒன்றாக சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாக கட்டி விழாமல் கலக்கவும். இதை கேக் மோல்டில் ஊற்றவும். இனி, மோல்டை அவனில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் 180 டிகிரியில் பேக் செய்து எடுத்துப் பரிமாறவும்.

சாக்லேட் பட்டர் க்ரீம் செய்யும் முறை

தேவையானவை:

வெண்ணெய் – 40 கிராம்
ஐஸிங் சர்க்கரை – ஒன்றரை கப்
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன்

செய்முறை

வெண்ணெய், சர்க்கரை, உப்பு, வெனிலா எசன்ஸை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து, மிருதுவாக நுரை பொங்கி வரும் வரை நன்கு அடிக்கவும். இத்துடன் பாலையும் சேர்த்து, கலந்து கேக்கின் மேல் பரப்பிவிட்டு, சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு பரிமாறவும்.

குறிப்பு:

கேக்கின் மீது விபிங் க்ரீமை வைத்துப் பரிமாறலாம்.