Author Topic: ~ நூடுல்ஸ் கட்லெட் ~  (Read 332 times)

Offline MysteRy

~ நூடுல்ஸ் கட்லெட் ~
« on: July 07, 2016, 02:46:05 PM »
நூடுல்ஸ் கட்லெட்



தேவையானவை:

வேக வைத்த நூடுல்ஸ் – 2 கப்
3 நிற குடமிளகாய் – தலா 1
வேக வைத்து மசித்த
உருளைக்கிழங்கு – 2
பொடியாக நறுக்கிய கேரட் – ஒன்று
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய
வெங்காயத்தாள் – 1 கட்டு
பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் – தலா 1 டேபிள்ஸ்பூன்
செஷ்வான் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு வெந்த நூடூல்ஸை சேர்த்து மிருதுவாக கிளறி, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடவும். கைப்பொறுக்கும் சூட்டில் படத்தில் காட்டியுள்ளது போல கட்லெட் வடிவத்துக்கு உருண்டை பிடித்து ஆற விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை சேர்த்து இருபுறமும் சுட்டெடுத்து எடுத்து சாஸோடு பரிமாறவும்.