Author Topic: ~ முடி கொட்டுகிறதா? கவலையை விடுங்கள் ~  (Read 360 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226712
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முடி கொட்டுகிறதா? கவலையை விடுங்கள்



முடி கொட்டுகிறதா? மிகவும் கஸ்ட்டப்படுரீங்களா? கவலையை விடுங்கள். எம் வீட்டிலேயே காணப்படும் சில பொருட்களை கொண்டு முடியை சீக்கிரம் வளர்த்துக் கொள்ளலாம்.

மருதாணி, செம்பருத்தி, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அவைகளைப் போலவே மற்றொரு பொருளும் கூந்தல் வளர்ச்சியை தூண்டும். அது என்ன தெரியுமா? கொய்யா இலை.
கொய்யா இலை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எல்லாவித விட்டமின்களும் உண்டு. ஜீரண சக்தியை மேம்படுத்தும். இது கூந்தலுக்கும் அற்புதம் செய்யும் என அறிவீர்களா?
கூந்தல் உதிர்வதை தடுக்க :
கை நிறைய கொய்யா இலைகளை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வையுங்கள்.
20 நிமிடங்கள் கழித்து, வடிகட்டி, அந்த நீரில் தலைமுடியை நனையுங்கள். குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவுங்கள். 5 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதனால், முடி உதிர்வதை தடுக்க முடியும்.