Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முடக்கத்தான் மருத்துவம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ முடக்கத்தான் மருத்துவம் ~ (Read 730 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226712
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ முடக்கத்தான் மருத்துவம் ~
«
on:
July 06, 2016, 11:51:40 AM »
முடக்கத்தான் மருத்துவம்
முடக்கறுத்தான்…. இதை முடக்கத்தான், மொடக்கத்தான் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். முடக்கு + அறுத்தான். அதாவது, வாதநோயால் கை, கால்களில் ஏற்படும் பிடிப்பு, வாதக்கோளாறுகளை சரிசெய்வதால் இந்த மூலிகைக்கு அந்தப் பெயர் வந்தது. வேலியோரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கீரை வகையைச் சேர்ந்தது. இதை சாம்பார், காரக்குழம்பு அல்லது புளிக்குழம்புகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடல்வலி, பிடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும். இதைப் பயன்படுத்தும்போது சிலருக்கு பேதியாகலாம், ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை.
வாதப்பிடிப்பு, இரைப்பு இருமல், மூலம், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் கீரையை நீர் விட்டு காய்ச்சி, தினமும் 2 தடவை 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடனடி பலன் கிடைக்கும். இதேபோல் முடக்கத்தான் ரசம் வைத்தும் சாப்பிடலாம். தோசை மாவுடன் மிக்ஸியில் அரைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். உடல் வலி உள்ளவர்களுக்கும், மூட்டுவலியால் அவதிப்படும் முதியோருக்கும் இந்த முடக்கத்தான் கீரை உணவுகள் கைகண்ட பலன் தரும்.
இது வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகை கீரை.
இலை துவர்ப்புச் சுவையுடையது.
இதனை எண்ணெய்யில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்து துவையல் செய்து உணவில் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
கீரையை சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
துவரம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்து கூட்டு செய்யலாம்.
கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி உண்டால், மூட்டு வலி, கை – கால் வலி, முதுகு வலி, உடல்வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து, நெய்யில் வதக்கி உட் கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
இக்கீரையின் சாற்றைக் காதில் விட்டால், காது வலி நிற்கும்.
கட்டிகளில் வைத்துக் கட்டினால், அவை உடைந்து புண் ஆறும்.
தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக் கரண்டி போதும்.
மருத்துவக் குணங்கள்:
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. சாதாரணமாக காய்கறிச் சந்தையில் இந்தக் கீரையும் கிடைக்கும்.
இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும்.
பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஓடிடும்.
முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.
இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம்
Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.
இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.
இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.
இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக்கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள “தாலைட்ஸ்” ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.
மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ முடக்கத்தான் மருத்துவம் ~