Author Topic: ~ முளைக்கீரைக் கடையல் ~  (Read 325 times)

Offline MysteRy

முளைக்கீரைக் கடையல்



தேவையான பொருட்கள்:

250 கிராம் முளைக்கீரை
(வெட்டியது 4 சுண்டுவரை)
1 தே.க .உப்புத்தூள்
3 பச்சை மிளகாய், பிளந்து போடவும்
3 மே. க. தடித்த தேங்காய்ப்பால்
1 தே.க. எலுமிச்சம்புளி
அவிய விடுவதற்கு 1/8-1/4 சு . தண்ணீர்
2 மே.க. சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது நெய்
½ தே.க.கடுகு
2-3 செத்தல் மிளகாய், சின்னதாக ஒடிக்கவும்
5-6 வெங்காயம், வட்டம் வட்டமாக வெட்டவும்
கருவேப்பிலை, கிழித்துப்போடவும்.
முளைக்கீரைக் கடையல்
முளைக்கீரையை ஒடித்து, தாராளமான தண்ணீரில் 2-3 முறை அலசிக் கழுவி, வடியவிட்டு, அரிந்து, ஒரு சட்டியில் போட்டு, பச்சை மிளகாயையும் போட்டு, மூடி அவியவிடவும். கொதித்து, நன்றாக வெந்த பிறகு திறந்து புரட்டிவிட்டு, நீர் வற்றியவுடன் தேங்காய்ப்பாலை விட்டு, உப்பைப் போட்டு வற்றவிட்டு இறக்கி, நன்றாக ஆறியபிறகு கடைந்து எலுமிச்ச்ம்புளியை விட்டு, தாளிதம் செய்து போடவும். தடித்த தேக்காய்ப்பாலுக்குப் பதிலாக, சிறிய எலுமிச்சம்பழமளவு அரைத்த தேங்காய்க் கூட்டையும் போடலாம்.