Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சோற்று கற்றாழை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சோற்று கற்றாழை ~ (Read 593 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226712
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சோற்று கற்றாழை ~
«
on:
July 05, 2016, 11:56:40 AM »
சோற்று கற்றாழை
பயன்படுத்தும் முறைகள்:
தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேணும்.அடுத்து என்ன கேக்கரிங்கனு புரியுது!!ஏன் கழுவனும்தானே…கற்றாழை சோற்றில்Aloin என்ற வேதிப்பொருள் இருக்குங்க, கழுவாது சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுமுங்க!!
மருத்துவ பயன்கள்;
1. கற்றாளை சோற்றை உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.
2. குமரி பூச்சு – அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.
3. குமரி களிம்பு – முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் நான் சேருகிறேன். சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும்.
4. குமரி பக்குவம் – இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,கரண்டியளவு சாப்பிட தீரும்.
5. குமரி எண்ணெய் – என்னுடைய சோற்றை,எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி,தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும்.தூக்கம் சிறப்பாக வரும்.
6.என்னைக்கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும்.
மருத்துவக் குணங்கள்
1. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறைகழுவி சுத்தம் செய்து,தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள்இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2. உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள்மறைந்து போகும்.
4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால்முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய்எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதைதலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்குசெழித்து வளரும்
6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம்சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல்பருக்காமலே.பலகீனம் மறையும் தாதுவிருத்தி ஏற்படும்.பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்;
7. சோற்றுக்கற்றாழை+வெள்ளைப்பூண்டு+பனங்கற்கண்டு+எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமானஅளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறுதொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .
8. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரைஎரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல்காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழைஉள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமானநீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமானஅளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை,மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
9. வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல்உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது,கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதிவெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடிகண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டைவைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்தநிறமும் மறைந்து விடும்.
10. இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பலநன்மைகளும் கிடைக்கும்.
11. சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில்நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும்.இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின்நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக்கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாதவெடிப்புகளும் குணமாகும்.
12. சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத்தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்துஉடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும்இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத்தடவி வரலாம்.
13. வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத்தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியைஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக்கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயேதயாரிக்கலாம்.
14. சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ,விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ,வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக்கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டிஇரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம்,வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம்,புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்தமலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15. செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.
16. இதுமட்டும் அல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை,குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறுவீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
17. இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளைகுடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கிசாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18. எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும்சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு,தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ளஇரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக்குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும்,புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
19. வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்குஇடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால்மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்தமுடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்
20) இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன்சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சர்மநோய்களையும் குணப்படுத்துகிறது.
21) முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள்உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிதுகற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில்வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுபெறும்.
22)தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
23) நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாககற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பிசத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ளகொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன்கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
வெயில் காலத்தில் வெப்ப சரீரமான பித்த உடம்பே அதிகம் பாதிக்கப்படுகிறது. வெயில் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கவும், உடல் வெப்பத்தைப் போக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்றாழை என்றாலும், சோற்றுக் கற்றாழை என்றாலும் ஒன்றுதான்.
சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரி¢ச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
உடல் எப்போதும் கோழி வயிறுபோல சூடாக இருப்பவர்களும் தேகத்தில் தோல் எரிச்சலாக இருக்கிறது என உணர்கிறவர்களும் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
இதனால் நல்ல உறக்கம், மனப் பதட்டம் குறைந்து அமைதியும் உடல் நலமும் கிடைக்கும். வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும்.
சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.
சிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்கு போகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேகஅனல் மாறும்.
இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
மூட்டு வலிருந்து நிவாரணம் பெற “அலோசன் ஹெல்த் டிரிங்க்” உதவும். இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.
காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும். உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
வயிறு கோளாறுக்கு சோற்றுக் கற்றாழை
|
சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
இதுமட்டும் அல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்
கற்றாழையின் மகிமையோ மகிமை
இயற்கையின் கொடைகள் பல . அவற்றுள் ஒன்று கற்றாழை . நம் முன்னோர்கள் இயற்கை சார்ந்த பொருட்களை வந்தனர். நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம் . இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும் .
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்கள் நன்மை அளிக்கின்றன . இலவசமாகவே காடுகளில் இம்மருந்து தன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கின்றன . கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழை ஆனது மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது . பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும் . இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன .
நீடித்த மலச்சிக்கலை போக்கவும் , வாய்வுத் தொல்லையை நீக்கவும் , வயிற்றின் சூட்டை தடுக்கவும் , தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது . சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது.
எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக் கூடியது . பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீர்ச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.
சோற்றுக் கற்றாழை , கன்னி , குமரி , தாழை என்று பல பெயர்களில் கற்றாழையை அழைப்பர் . இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும். தளிர்பச்சை,இளம்பச்சை,கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை ,பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை ,செங்கற்றாழை, எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி , முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது . முகத்துக்கு பூசும் கிரீம்கள் , நகத்துக்கு பூசும் நகப்பூச்சு போன்றன இந்த கற்றாழையில் இருந்து தான் பெறப்படுகிறது .நம்மில் சிலர் வீடுகளிலும் கற்றாழை வளர்க்கிறார்கள் . நம்மில் பலருக்கு கற்றாழையின் மகிமை தெரிவதில்லை . தெரியாதவர்கள் கற்றாழையின் மகிமைகளை அறிந்து கொள்வோம் .
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சோற்று கற்றாழை ~