Author Topic: ~ சப்ளி கபாப்: ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபி ~  (Read 331 times)

Online MysteRy

சப்ளி கபாப்: ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபி



தேவையான பொருட்கள்:

 மட்டன் கீமா – 1/2 கிலோ கோதுமை மாவு – 4 டேபிள் ஸ்பூன் முட்டை – 1 வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது) சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

 மட்டன் கீமாவை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கீமாவில் எண்ணெயை தவிர்த்து, அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதை தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சப்ளி கபாப் ரெடி!!!