Author Topic: ~ கருப்பட்டி மிட்டாய் ~  (Read 333 times)

Online MysteRy

கருப்பட்டி மிட்டாய்



தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்
முழு உழுந்து – ¼கப்
எண்ணெய் – பொரிக்க
கருப்பட்டி – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
சுக்கு தூள் – 1 தேக்கரண்டி
நீர் – 1 கப்

செய்முறை

அரிசி மற்றும் பருப்பைஎடுத்துக் கொள்ளவும்
அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்யவும்
பின்பு அதனுடன் நீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்
அரிசி ஊறியதும் அதனை வடிகட்டி மிக்சியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதனை ஒரு பா்ததிரத்தில் எடுத்து 30 நிமிடம் – 1 மணி நேரம் வரை தனியே வைக்கவும்
பின்பு கருப்பட்டியை எடுத்துக் கொள்ளவும்
அதனை உடைத்து ஒரு பானில் எடுத்துக் கொள்ளவும்
சிறிது நீர் சோ்க்கவும்
நன்கு கலக்கி கருப்பட்டி கரையும் வரை கொதிக்க வைக்கவும்
பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும்
பின்பு அதனை ஒரு பானில் விடவும்
சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்
பின்பு அதனுடன் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு தீயை நன்கு குறைத்து வைக்கவும்
பின்பு பை்பிங் பேக்கை எடுத்துக் கொள்ளவும்
அதனுள் மாவை நிரப்பி. அதனை மூடியால் மூடவும்
பின்பு எண்ணெயில் மாவை படத்தில் உள்ளது போல் விடவும்
அதனை பொரித்தெடுக்கவும்
பின்பு அதனை எடுத்து ஒரு தடடில் வைக்கவும்
அதனை கருப்பட்டி கலவையில் போட்டு 2-3 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பின்பு அதனை எடுத்து பரிமாறவும்