Author Topic: ~ சத்தான சுவையான கொள்ளு பொடி ~  (Read 574 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226282
  • Total likes: 28766
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சத்தான சுவையான கொள்ளு பொடி



தேவையான பொருட்கள் :

கொள்ளு – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
* பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.
* கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும்.
* கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.
* வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
* இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.