Author Topic: ~ சீலா மீன் பிக்கிள் ~  (Read 381 times)

Offline MysteRy

~ சீலா மீன் பிக்கிள் ~
« on: July 01, 2016, 11:29:30 PM »
சீலா மீன் பிக்கிள்



தேவையான பொருட்கள்

சீலா மீன் – அரை கிலோ
நல்லெண்ணெய் – 100 மில்லி
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – பத்து பல்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கு
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடி பண்ண:
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பெருங்காயம் – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – மூன்று

செய்முறை

மீனைச்சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து பிசறி அரைமணி நேரம் வைத்து பின் நல்ல முறுகளாக பொரித்து எடுக்கவும்.
பின்பு கடாயில் பொரித்த எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் இரண்டு போட்டு தாளித்து,பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு கிளறி வறுத்து பொடித்த பொருட்களை போட்டு, சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும். மீன் ஊறுகாய் ரெடி. ஆற வைத்து பாட்டிலில் அடைத்து வைக்கவும்