Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா? ~ (Read 344 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226716
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா? ~
«
on:
July 01, 2016, 11:55:30 PM »
மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா?
மாங்காயின் இலை, வேறு, பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
அதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மாங்காய் குழம்பு செய்யும் முறை
முதலில், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கசகசா, கடுகு உள்ளிட்ட பொருள்களை லேசாக வதக்கி, அரைக்க வேண்டும்.
மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவினால் மாங்காய் குழம்பு தயார்.
மாங்காய் குழம்பின் பயன்கள்
மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை குணப்படுத்தும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுவதோடு புற்றுநோய் தாக்கமால் இருக்கவும் உதவுகிறது.
மாங்கொட்டை கஷாயம் செய்யும் முறை
முதலில் மாங்கொட்டை பருப்பை எடுத்து நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் வாணலியில் நீர் வைத்து, அதை கொதிக்கவிட்டு அந்த பொடியை அதில் போட்டு கலக்கினால் மாங்கொட்டை கஷாயம் தயார்.
மாங்கொட்டை கஷாயத்தின் பயன்கள்
அந்தக் கஷாயத்தை சாப்பிடுவதால், நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் நீங்கும். அதோடு, சர்ம எரிச்சலை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தும் ஆகும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா? ~