« on: June 24, 2016, 07:47:44 PM »
உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு சாம்பார்
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தளை – 1 மேஜைக்கரண்டி
அரைக்க
கடலைப் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் – 2 மேஜைக்கரண்டி
வத்தல் மிளகாய் – 3
வெந்தயம் – 1 தேக்கரண்டி
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு, – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
சாம்பார் தூளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
அவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்
பொன்னிறமாக வறுக்கவும்
பின்பு அதனை அரைக்கவும்
மென்மையாக அரைக்கவும்
பின்பு அனைத்து காய்கறிகளையும் பிரஷர் குக்கரில் போடவும்
காய்கறிகள் மூழ்கும் அளவு நீர் சேர்க்கவும்
பின்பு அவை நன்கு மசியும் வரை வேக வைக்கவும்
மீண்டும் நீர் சேர்க்கவும்
பின்பு அரைத்த மசாலாவை சேர்க்கவும்
பின்பு வெல்லம் சேர்க்கவும்
பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்
அதனுடன் புளி சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
தாளித்தவற்றை சாம்பாரில் ஊற்றவும்
பின்பு மல்லித்தளை சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
« Last Edit: June 24, 2016, 07:49:51 PM by MysteRy »

Logged