Author Topic: ~ முட்டை தொக்கு ~  (Read 377 times)

Offline MysteRy

~ முட்டை தொக்கு ~
« on: June 24, 2016, 07:23:28 PM »
முட்டை தொக்கு



வேகவைத்த முட்டை – 3
வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – தாளிக்க
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5 இலை
மிளகுதூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

முட்டை தொக்கு

முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு முதலியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டினை சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கிவுடன் வெங்காயம், தக்காளி ஒன்றின்பின் ஒன்றாக போட்டு 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.
இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், வேகவைத்த முட்டை, உப்பு சேர்த்து, தூள் வசனை போகும் வரை வேகவிடவும். கடைசியில் மிளகுதூள், கொத்தமல்லி தூவி மேலும் 1 நிமிடம் கிளறி வேகவிடவும். சுவையான முட்டை தொக்கு ரெடி.