Author Topic: ~ பருப்பு இட்லி ~  (Read 452 times)

Offline MysteRy

~ பருப்பு இட்லி ~
« on: June 23, 2016, 11:16:19 AM »
பருப்பு இட்லி



தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
உளுந்தம் பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு -1/2 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
தயிர் – சிறிது
உப்பு – தேவையான அளவு
பருப்பு இட்லி

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து ஊற வைக்கவும். அனைத்தும் ஊறியதும் தனிதனியாக அரைத்தெடுத்து, ஒன்றாகச் சேர்த்து உப்பு மற்றும் தயிர் சேர்த்து பதமாகக் கலந்து வைக்கவும். இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். சுவையான சத்தான பருப்பு இட்லி தயார்…… புதினா சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்