Author Topic: ~ பிஸ்தாவின் மருத்துவ குணங்கள் ~  (Read 148 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218977
  • Total likes: 23779
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிஸ்தாவின் மருத்துவ குணங்கள்

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.
அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.
வைட்டமின் “பி6” ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது



அழகான சருமம்
பிஸ்தாவில் வைட்டமின் “ஈ” மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது.
மேலும் வைட்டமின் ஈ ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.
ஆரோக்கியமான பார்வை
பிஸ்தா பருப்பில் சியாசாந்தின்(Zeaxanthin) மற்றும் லூட்டின்(Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது.
இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது.
மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோய்
பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.
மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.
மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.
இதய ஆரோக்கியம்
பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது.
பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா உட்கொண்டால் லுடீன் அளவை அதிகரிப்பதோடு இதயநோயின் அளவையும் குறைக்கும்