Author Topic: ~ தக்காளி கூட்டு ~  (Read 321 times)

Offline MysteRy

~ தக்காளி கூட்டு ~
« on: June 15, 2016, 09:47:19 PM »
தக்காளி கூட்டு



வெங்காயம் -1
தக்காளி – 1/4 கிலோ
பாசிப் பருப்பு -100 கிராம்
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துருவல் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்
வர மிளகாய் -2
கருவேப்பிலை -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

 கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு
முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்
பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு ,தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு வேக விடவும்.பருப்பு வெந்த பின்பு அதில் நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை போட்டு வேக விடவும்.தக்காளி பருப்புடன் சுண்டி வரும்போது அதில் தேங்காய் துருவலை போட்டு இறக்கவும்.தக்காளி கூட்டு ரெடி.