Author Topic: ~ சாம்பார் ~  (Read 387 times)

Offline MysteRy

~ சாம்பார் ~
« on: June 06, 2016, 11:40:27 PM »
சாம்பார்



தேவையான பொருட்கள் :

புளி : 1 எலுமிச்சை அளவு (2 டம்ளர் தண்ணீர் விட்டு ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்)
து.பருப்பு : 2 கரண்டி (மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்)
சாம்பார் பொடி : 1 1/2 to 2 (அவரவர் காரத்திற்கேற்ப)
உப்பு : ருசிக்கு ஏற்ப
பெருங்காயம் : 1 சிறிய கட்டி
கடுகு : 1 டி ஸ்பூன்.
வெந்தயம் : 1/2 டி ஸ்பூன்
எண்ணை : 2 டேபிள் ஸ்பூன்
பச்சை கொத்தமல்லி (or) கருவேப்பிலை : சிறிது
(வெண்டை, முருங்கை, அவரை, குடை மிளகாய், பரங்கி, பூசணி – எதாவது ஒரு காய் – துண்டங்களாக நறுக்கவும்)

செய்முறை :

– வாணலியில் 1 ஸ்பூன் எண்ணை விட்டு காயை 3 நிமிடம் வதக்கி அதனுடன் புளி தண்ணீர் சேர்க்கவும்.
– பிறகு சாம்பார் போடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.
– புளி பச்சை வாசனை போய், காய் வெந்தவுடன் வெந்த பருப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
– எல்லாம் சேர்த்து கொதித்து வரும் பொழுது இறக்கி மீதி எண்ணையில் கடுகு, வெந்தயம், தாளித்து கொத்தமல்லி அல்லது கறிவேப்பிலை சேர்க்கவும்.
– இது சாதாரண சாம்பார். இதையே கொஞ்சம் rich ஆக வேண்டுமானால், தனியா – 2 டி ஸ்பூன். கடலை பருப்பு – 1 டி ஸ்பூன், தேங்காய் திருவள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல்-2 சேர்த்து வறுத்து அரைத்து விட்டால், அரைத்து விட்ட சாம்பார்.
– வெயில் நாளாக இருப்பதால், புளியை கொஞ்சம் குறைத்து 2 தக்காளி சேர்க்கலாம்.