Author Topic: ~ குலாப் ஜாமூன் ~  (Read 397 times)

Offline MysteRy

~ குலாப் ஜாமூன் ~
« on: June 04, 2016, 09:54:47 PM »


தேவையான பொருட்கள்

அரை கப் பசும் பால்
இரண்டு கப் பால் மாவுgg
அரை கப் கோதுமை மாவு (அல்லது மைதா மாவு)
அரை கப் ரவை
வெண்ணை இரண்டு டீஸ்பூன்
இரண்டு கப் சர்க்கரை (சீனி)
தேங்காய் எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு (அல்லது சூரியகாந்தி எண்ணெய்)
சோடா உப்பு கால் தேக்கரண்டி
பன்னீர், எலுமிச்சை சாறு தேவைக்கு

தயார் செய்யும் முறை:

முதலில் வெண்ணையையும் பால் மாவையும் நன்றாக சேர்த்து உதிரியாக கலக்கவேண்டும்.
அதனுடன் சோடா உப்பையும் கோதுமை மாவையும் நன்றாக கலக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதில் அதே அளவு இளஞ்சூடான நீரை சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்துவிட்டு இந்த கெட்டியான கலவையை முதலில் கலந்த பால்மா கலவையுடன் உதிரியாக கலக்க வேண்டும்.
இந்த மாவுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பாத்திரத்தில் ஒட்டாமல் பிசைய வேண்டும்.
மொத்த மாவையும் நல்ல ஈரமான துணியால் மூடி வைக்கவும்பின்பு அதை சின்னச்சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும். இதை தனியாக வைத்துவிட்டு, வாணலியில் இரண்டு கப் சர்க்கைக்கு ஒரு கப் தண்ணீர் விட்டு நூல் பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். பதம் வந்ததும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் பன்னீரையும் இரண்டு துளி எலுமிச்சை சாறையும் விட்டு கலக்கவும்.
எலுமிச்சை சாறு விடுவதால் பாகு கெட்டியாகாமல் இருக்கும். இதை தனியாக வைத்துவிட்டு, இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது சூடானதும் உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டையை எண்ணெயில் இட்டு பொரிந்ததும் சர்க்கரை பாகுவில் ஒரு தடவை முக்கி தனியாக எடுத்து வைக்கவும். இவ்வகை குலாப்ஜாமூன் கலோரி மற்றும் இனிப்பு குறைந்தது. எனவே இனிப்பு பிடிக்காதவர்களும் இனி குலாப்ஜாமூன் செய்து சாப்பிடலாம் இனிப்பு அதிகம் தேவை எனில் உருண்டையை பாகுவில் அதிகநேரம் போட்டும் அல்லது அப்படியே போட்டு வைத்தும் சாப்பிடலாம்.