Author Topic: ~ தட்டை ~  (Read 363 times)

Offline MysteRy

~ தட்டை ~
« on: June 01, 2016, 09:30:27 PM »


தேவையான பொருட்கள:

பச்சரிசி மாவு — 4 பங்கு
பொட்டுக்கடலை மாவு — 1 பங்கு
பூண்டு — 5 பல் (நசுக்கியது)
கறிவேப்பிலை — சிறிதளவு
பெருங்காயம் — 1/2 டீஸ்பூன் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது)
கடலை பருப்பு — 1 ஸ்பூன் (ஊற வைத்தது)
மிளகாய் தூள் — காரத்திற்கேற்ப
வெண்ணைய் — 1 ஸ்பூன்
சோடா மாவு — 2 சிட்டிகை

செய்முறை:

மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து பிசைந்து, தேவையெனில் தண்ணீர் தெளித்து வைக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கையால் தட்டி தட்டி வட்டமாக இட்டு காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான தட்டை ரெடி.