Author Topic: ~ பூண்டு ஊறுகாய் ~  (Read 384 times)

Offline MysteRy

~ பூண்டு ஊறுகாய் ~
« on: June 01, 2016, 08:57:32 PM »


தேவையான பொருட்கள்

பூண்டு – 500 கிராம்
கடுகு – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயதூள் – ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைபழம் – 10
வெந்தயம் – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டுகை
காய்ந்த மிளகாய்த் தூள் – 150 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைப் பழத்தை நறுக்கி சாறுபிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் போட்டு, அதனுடன் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். பூண்டு வதங்கி பொன்னிறமாக வந்தவுடன் உப்பு சேர்க்க வேண்டும்.
பூண்டு நன்கு வதங்கியவுடன் எலுமிச்சைப்பழச் சாற்றை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். சாறு வற்றியவுடன் மிளகாய் தூளை கொட்டி கிளற வேண்டும்.
நன்றாக கிளறியபின்பு இறக்கி வைக்க வேண்டும்.