Author Topic: 10 பயனுள்ள குறிப்புகள்..  (Read 1031 times)

Offline BreeZe

1. பற்களில் கரை(parkkalil karai) :என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

2. பூச்சி தொல்லை(Poochi Thollai) : புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லையா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை. வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.

3. செடி செழித்து வளர(sedi sezhitthu valara): மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும்.

4. பெண்களுக்கு ஏற்ப்படும் நோய் தீர( pengalukku erppadum noi theera): பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது. ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

5. பல்வலி குறைய(Pal vali kuraiya): அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.

6. ரத்த அழுத்தம், மலச்சிக்கல், உடல் வெப்பம் குறைய(rattha alutham, mala sikkal, udal veppam kuraiya): அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல் வரமால் தடுக்கும்.

7. நாவறட்சி குறைய(naavaratchi kuraiya): அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா. கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

8. மூக்கடைப்பு நீங்க ( mookadaippu  neenga): ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

9. கொய்யா, மா, சப்போட்டா காய்க்க( maa, koyya, sappotta kaaikka): உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்

10. காயங்கள் குணமாக(kaayangal kunamaaga): வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்..