Author Topic: ~ குடை மிளகாய் பருப்பு உசிலி~  (Read 1001 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227453
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குடை மிளகாய் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள் ;

குடை மிளகாய் : 5 Nos
துவரம் பருப்பு : 200 கிராம்
கடலை பருப்பு : 50 கிராம்
சிவப்பு மிளகாய் : 8 Nos (மிளகாய் வற்றல்)
உப்பு : தேவைக்கேற்ப
பெருங்காயம் : 1 டி ஸ்பூன்

தாளிப்பதற்கு :

கடுகு : 1 டி ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : 2 டி ஸ்பூன்
சமையல் எண்ணை : தேவையான அளவு



செய்முறை :

துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடை மிளகாயை விதை நீக்கி, சிறு துண்டங்களாக நறுக்கு கொள்ளவும்.
ஊறிய பருப்புகளை பிழிந்து மிக்சியில் போட்டு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்தவுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.
பருப்பு உசிலி ரெடி.
மோர் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.