Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கொத்தவரை தீர்க்கும் நோய்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கொத்தவரை தீர்க்கும் நோய்கள் ~ (Read 376 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226723
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கொத்தவரை தீர்க்கும் நோய்கள் ~
«
on:
May 21, 2016, 02:06:26 PM »
கொத்தவரை தீர்க்கும் நோய்கள்
* கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலுகிறது.
* கொத்தவரையில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) மிகுதியாக இருப்பதால் ஒரு தாது உப்பான இந்த சுண்ணாம்பு சத்து எலும்புகளைப் பலப்படுத்தும் பணியில் உதவுகிறது. இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகளுக்கு கொத்தவரை ஓர் சிறந்த தீர்வாகிறது எனலாம்.
* கொத்தவரை இதய ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஓர் மருத்துவ உணவாக விளங்குகிறது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். என்னும், ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்துக்கு தடையாய் இருக்கும் கொழுப்புச் சத்தைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. கொத்தவரையில் இருக்கும் உணவாகும் நார்ச்சத்து பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல் வேறு நோய்களினின்றும் பாதுகாக்க வல்லவை.
* கொத்தவரையில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களைக் குணப்படுத்தும் சத்துக் களை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.
* பிள்ளைப்பேறு என்னும் கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும் எனில் மிகையாகாது. கர்ப்பிணிகளின் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புத் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேலும் கொத்தவரையில் உள்ள விட்டமின் கே சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங்குகின்றன.
* கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்தவரையில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சத்துவம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. மேலும் பிராண வாயுவைக் கடத்திச் செல்லும் ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.
* கொத்தவரை செரிமானத்துக்கு (டைஜெஸ்ஷன்) மிகவும் உதவியாக விளங்குகிறது. கொத்தவரையில் இருக்கும் மிகவும் மென்மையான மலமிளக்கும் (லேக்ஸேட்டிவ்) வேதிப்பொருட்கள் சீரானப்பாதை சீராகச் செயல்படுமாறு தூண்டுகின்றன. இதனால் இரையறையில் தங்கித் தன்னிச்சையாக செயல்பட்டுப் புற்று நோய் வரக்காரணமாக இருக்கும் கழிவுகள் (டாக்ஸின்) வெளியேற்றப் படுகின்றன.
* மூளைக்கு ஏற்படும் அழச்சியைத் தவிர்க்க கொத்தவரை ஓர் மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்த வரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர்வை தருவதாக விளங்குகிறது. மேலும் இச்சத்துக்கள் மன உளைச்சல் (ஆங்க்ஸைட்டி) மற்றும் இதயப்படபடப்பு (டென்ஷன்) ஆகியவற்றைப் போக்க உதவி மனிதனுக்கு அமைதி தரவல்லதாய் விளங்குகிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கொத்தவரை தீர்க்கும் நோய்கள் ~