Author Topic: ~ மட்டன் சேமியா ~  (Read 379 times)

Offline MysteRy

~ மட்டன் சேமியா ~
« on: May 21, 2016, 12:00:38 PM »
மட்டன் சேமியா

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 பாக்கெட்
 மட்டன்(கொத்தியது) – 150 கிராம்
 தக்காளி – 2 (சிறியது)
 புதினா – 7, 8 இலைகள்
 கொத்தமல்லிதழை – சிறிதளவு
 இஞ்சி – 1/2 டீ ஸ்பூன்
 பூண்டு – 1/2 டீ ஸ்பூன்
 தனியா தூள் – 1 டீ ஸ்பூன்
 மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
 கேசரி பவுடர் – சிறிதளவு
 நெய் – 50 கிராம்
 எண்ணெய் – 1 ஸ்பூன்
 வெங்காயம் – 1
 பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1
 கரம் மசாலா பவுடர் (அ) சிக்கன் மசாலா – 1/2 டீ ஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு



செய்முறை:

* வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

* தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.

* புதினா கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கறியை தண்ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

* பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் கறி, தனியாதூள், மிளகாய் தூள், கேசரி பவுடர், கரம் மசாலா பவுடர் போட்டு வதக்கவும்.

* 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் ஒவ்வொரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும்.

* தண்ணீர் வற்றியதும் மூடி போட்டு மேலே கனமான சாமான் வைத்து சிம்மில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
 Follow