Author Topic: ~ கேபேஜ் பனீர் பால்ஸ் ~  (Read 439 times)

Offline MysteRy

~ கேபேஜ் பனீர் பால்ஸ் ~
« on: May 21, 2016, 01:24:47 AM »
கேபேஜ் பனீர் பால்ஸ்



தேவையானவை :

 முட்டைகோஸ் – 100 கிராம் கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம், பெரிய வெங்காயம் – 2 (நான்கு காய்கறிகளையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), உதிர்த்த பனீர் – 100 கிராம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், மைதா மாவு – 8 டேபிள்ஸ்பூன், கார்ன் ஃப்ளார் – 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய், ரஸ்க்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

 ரஸ்க்தூள், எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான நீர் விட்டு நன்கு கலந்து, சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்