Author Topic: ~ சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் ~  (Read 352 times)

Offline MysteRy

சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்



தேவையானவை:

பாஸ்மதி அரிசி – 2 கப், அஜினமோட்டோ – அரை டீஸ்பூன், சோயா சாஸ் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தூள் – ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 6லிருந்து 8, பூண்டு – 4 பல். எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மூன்று காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், அரைத்த விழுதைச் சேருங்கள். பிறகு அதில், மீதமுள்ள காய்ந்த மிளகாய்களை இரண்டாகக் கிள்ளிப் போட்டு, பச்சை வாடை போகும் வரை கிளறி, அதில் வடித்த சாதம், அஜினமோட்டோ, சோயா சாஸ், வெங்காயத்தாள், உப்பு சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறுங்கள்.