Author Topic: ~ தக்காளி பூரி ~  (Read 433 times)

Online MysteRy

~ தக்காளி பூரி ~
« on: May 15, 2016, 11:41:17 PM »
தக்காளி பூரி



தேவையானவை:

 மைதா – ஒரு கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், தக்காளி – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு வடிகட்டி… சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.