Author Topic: ~ முருங்கைக்காய் கூட்டு ~  (Read 541 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227458
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முருங்கைக்காய் கூட்டு



தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் = அரை கிலோ
வெங்காயம் = 1
கடுகு = 1 ஸ்பூன்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
கருப்பு சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

முருங்கைக்காயை இரண்டங்குல துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீறவும். கடுகை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முருங்கைக்காய், வெங்காயம் அரைத்த கடுகு, மிளகாய் பொடி, கருப்பு சீரகம், உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். இதை சிறிது நேரம் மூடி வேக விட்டுப் பின் திறந்து வைத்து வதக்கவும். சிறிது எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கி விடவும்.
சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றோடு ப‌ரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.