Author Topic: ~ கடாய் சிக்கன் (ஸ்பெஷல்) ~  (Read 302 times)

Offline MysteRy

கடாய் சிக்கன் (ஸ்பெஷல்)



சிக்கன் ½ கிலோ
பல்லாரி 2
தக்காளி 2
பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,
சீரகம் சோம்புப்பொடி 2
ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை கொஞ்சம்
தேங்காய் கால் கப்
முந்திரி 15
இடியப்பமாவு 2ஸ்பூன்
ஆயில், உப்பு

செய்முறை;

*       சிக்கனை சுத்தமாகி மீடியமான சைசில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்பு
பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
*     ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை ஏலம் கிராம்பு போட்டு வாசனை          வந்ததும் கட்செய்த பல்லாரி தக்காளி  மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி போட்டு        நன்றாக வதக்கவும்.
*     மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனைபோட்டு கிளரிவிட்டு
மூடி அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.
*     மிக்சியில்  தேங்காய்,   பொ,. கடலை,  முந்திரியை  அரைத்து   கொண்டு
சிக்கன்  நன்றக  வெந்து  சிவந்த  நிறத்துக்கு  வந்ததும் அரைத்த இந்தவிழுதை         அதனுடன் சேர்த்துகிளரவும்.
*   அடுப்பை சிம்மில் வைத்தே இத்தனையும் செய்யவும்
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.