Author Topic: ~ முகத்தில் பருக்களா? நீங்கள் பின்பற்ற வேண்டியவை! ~  (Read 369 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227495
  • Total likes: 29062
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முகத்தில் பருக்களா? நீங்கள் பின்பற்ற வேண்டியவை!

இளம் வயதினருக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், முகத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அடைக்கப்பட்டு, அந்த இடத்தில் பாக்டீரியா உருவாகும்.



பின் இந்த பாக்டீரியா வளர்ச்சி அடைந்து, முகப்பருக்களாக மாறும்.
11 வயதில் தொடங்கும் முகப்பருக்கள், 25 வயதுவரை நீடிக்கும்.
ஆண்களுக்கு, இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கவும்வாய்ப்புள்ளது.
பொதுவாக, 18 வயதில் அதிக அளவில்பருக்கள் தோன்றும்.
பருக்கள் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!
முகத்துக்கு அதிகமாக அழகு சாதனப்பொருட்கள் (காஸ்மெடிக்ஸ்) பயன்படுத்து வதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, எண்ணெய் சார்ந்த க்ரீம்களை(ஆயில் பேஸ்டு) தவிர்க்க வேண்டும்.
வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சி களின்போது காஸ்மெடிக் க்ரீம்கள் பயன்படுத்தினாலும், வீடு திரும்பியவுடன் முதல் வேலையாக முகத்தைக் கழுவ வேண்டும்.
அடிக்கடி சோப் அல்லது ஃபேஸ்வாஷ் கொண்டு முகத்தைக் கழுவிக்கொண்டே இருப்பதால், பருக்கள் போகாது. எனவே, அதைத் தவிர்க்கவும்.
நமது சருமத்தின் pH அளவு5.5. அதற்கு ஏற்ற சோப்பைத் தேர்வு செய்து,தினமும் இருமுறை முகத்தைக் கழுவினால் போதுமானது.
வேம்பு, மஞ்சள் போன்ற‘ஆன்டி பாக்டீரியல்’குணம் கொண்ட தாவரங்களாலான சோப் மற்றும் ஃபேஸ்வாஷ் பரிந்துரைக்க ஏற்றது. ஆனால், அவற்றிலும் pH அளவு 5.5 அல்லது அதையொட்டி இருக்கவேண்டும்.
முல்தானிமட்டி, எண் ணெய்ச் சுரப்பை கட்டுப்படுத்தும். ஆனால், அதை அதிகளவு பயன்படுத்தக்கூடாது.
அதிகமாக இனிப்புகளை உண்பதும் முகப்பருக்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.
எனவே, இனிப்புகளைத் தவிர்க்கலாம் அல்லது சர்க்கரையின்அளவு குறைவாக உள்ள இனிப்புகளைஉண்ணலாம்.
தண்ணீர் நிறையக் குடிப்பதன் மூலமும் முகப்பருக்களை கட்டுப்படுத்தலாம்.
முக்கியமாக பருக்கள், கரும்புள்ளிகள், கட்டிகளை நகத்தால் கிள்ளவோ நீக்கவோ கூடாது. கட்டிகள் சிதைவடைந்தால், அவை முகத்தின் மற்றபகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.