Author Topic: ~ எலுமிச்சை சாதம் ~  (Read 434 times)

Offline MysteRy

~ எலுமிச்சை சாதம் ~
« on: May 11, 2016, 11:02:29 PM »
எலுமிச்சை சாதம்



தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
காய்ந்தமிளகாய் – 4,5
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெல்லம் – சிறு கட்டி(விரும்பினால்)
பெருங்காயம்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம்.

செய்முறை:

கடுகு, வெந்தயத்தை எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, வெல்லம், தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்துவிடவும்.
வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
உதிராக வடித்த சாதம் சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நெய், தாளித்தவை, சாறுக் கலவை எல்லாம் சேர்த்து உடையாமல் கலக்கவும்.