Author Topic: ~ ஒருநாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்? ~  (Read 460 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226725
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஒருநாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி, இதற்கேற்ப ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பினும் அளவாகவே சாப்பிட வேண்டும்.



இல்லையெனில் அதுவே எல்லை மீறி உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தகூடும்.
உங்களது இரு கைகளை கூப்பினால் எவ்வளவு காய்கறிகள் அடங்குமோ, அந்த அளவை மட்டும் தினமும் எடுத்துக் கொண்டால் போதும்.
இதேபோன்று உங்களது ஒரு கையை மூடிய அளவில் எவ்வளவு பழங்கள் அடங்குமோ, அதையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கைகளை மடக்காமல் உள்ளங்கை அளவில் மட்டுமே இறைச்சியை உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
வெண்ணெய், நெய், சீஸ் போன்ற பால் உணவுகளுக்கு உங்களது ஆட்காட்டி மற்றும் நடுவிரலை இணைத்தால் எவ்வளவோ அடங்குமோ அதையே உட்கொள்ள வேண்டும்.