Author Topic: ~ சிவப்பு அவல் புட்டு ~  (Read 410 times)

Offline MysteRy

~ சிவப்பு அவல் புட்டு ~
« on: May 03, 2016, 09:57:23 PM »
சிவப்பு அவல் புட்டு



தேவையான பொருட்கள்:

சிகப்பு அவல் – ஒரு கப்,
நாட்டு சர்க்கரை,
தேங்காய் துருவல் – தலா கால் கப்,
நெய், பூசணி விதை, ஏலக்காய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

* அவலை நீரில் நன்றாக அலசி வடித்து, உப்பு நீர் தெளித்து பிசறி 10 நிமிடங்கள் வைக்கவும்.
* இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
* துளி நெய்யில் ஏலக்காய்த்தூள், பூசணி விதை வறுத்து போட்டு, நாட்டு சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.
பலன்கள்: அவலில் இரும்புச் சத்து மிக அதிகம். மேலும் இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், உடலுக்கு நல்ல வளர்ச்சி தரும். எளிதில் செரிமானமாகும். உடல் வலுப்பெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.